சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்வு!
கிண்டி:சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி கிண்டியில் இந்த அமைப்பின் தலைவர் ஜோசப் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறையில் சாதனை படைத்து வரும் மகளிர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் ஒசூர் அரசு பொது மருத்துவமனை மருத்துவ பணியாளர் மற்றும் சமூக சேவகர் கண்ணகி அவர்கள் பல்வேறு மனிதம் சார்ந்த சமூக சேவைகள் மற்றும் மருத்துவத்துறையில் சிறப்புற பணியாற்றி வருவதற்காக தேசிய மற்றும் அகில இந்திய அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
