மத்திய சென்னை  பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் எம். எல். இரவி வேட்பு மனு தாக்கல்!

செனாய்நகர்:
பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதிக்கு தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,சுயேட்சை வேட்பாளருமான வழக்கறிஞர் எம். எல். இரவி அவர்கள் மண்டலம் -8 ல் தேர்தல் நடத்தும் அலுவலர் கே. ஜே. பிரவீன் குமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் உறுதி மொழி வாசிக்கப்பட்டது.