மதுரை:
அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் (All India Congress Workers Committee – AICWC) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும் (TamilNadu State President of Minority’s Cell) மற்றும் சட்டப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் (State Co-Ordinator Legal Cell) மதுரையைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் அ. ஜமாலுதீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பேரியகத்தின் தேசிய நிறுவனத் தலைவர் சுதேப் சக்ரவர்த்தி மற்றும் தேசிய செயல் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் நல அறக்கட்டளையின் (AICWWT) நிறுவனத் தலைவருமான தாக்கூர் அனில் சிங் தேசிய பொதுச்செயலாளர் கே. ஏ. ஜெஹீரூதீன் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நியமன ஆணை வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட வழக்கறிஞர் அ. ஜமாலுதீன், நீண்ட காலமாகப் பொதுப்பணிகளிலும், சட்டத்துறையிலும் தீவிரமாக இயங்கிவரும்
தனது புதிய நியமனம் குறித்து வழக்கறிஞர் ஏ. ஜமாலுதீன் அவர்கள் கூறுகையில் அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவர் மற்றும் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு மாநில சட்ட பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் என்னை நியமித்த தேசிய தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கட்சியின் சட்டப் பிரிவை வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நான் அர்ப்பணிப்புடன் முழு மூச்சாகப் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

இவரது புதிய நியமனத்திற்குப் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.