சென்னை:
நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில், மருத்துவத் துறையில் தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனிதநேயம் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் என்பிஎஸ் அன்பு மருத்துவர் விருது – 2026 வழங்கும் விழா சென்னை, போரூர், சென்னை லீ பேலஸ் ஹோட்டலில்
நம் பாரத சேவை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் டாக்டர் ந. பால சரவணன் அவர்களின் உயரிய சிந்தனை மற்றும் மனிதநேயக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்விற்காக சிவகாசியை சேர்ந்த நேத்ர ஸ்ரீ டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு அன்பு வைத்தியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.