செய்யாறு:டாக்டர் அப்துல் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மற்றும் விருட்சம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு இந்த அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜெயராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முத்துவேல் முத்துக்குமார் முன்னிலை வகிக்க இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு அப்துல் கலாம் அவர்களின் சிலையை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கொரோனா தொற்று காலக் கட்டத்தில் பொது மக்களுக்கு சிறப்பான சமூக தொண்டாற்றியதற்காக சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் அவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.