அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் ஆட்டோ சங்க பலகை திறப்பு விழா!

சென்னை:பாபா சாகேப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறையின் ஆட்டோ சங்க பலகை திறப்பு விழா பொன்மார் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமூக நீதிக் காவலரும் ,அபயம் மாநில தலைவருமான ஏ. என். லெமூரியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் இந் நிகழ்வில் ஆட்டோ சங்கத் தலைவர் ஜோஷுவா , முரளி , செந்தில்குமார், சங்க உறுப்பினர்களான சந்தோஷ், காந்தி , ஜெயக்குமார் , சேகர் ,ராபின் தேவியப்பன் , ஸ்டாலின் ,பார்த்திபன் கங்காதரன் , நரேஷ் குமார் ,செந்தில் அஜித்குமார் உள்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலந்தூர் நகர தலைவர் அருள் முருகன் ,மாநில ஆட்டோ ஓட்டுநர் சங்க பொறுப்பாளர் நங்கநல்லூர் பாபு ,நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் மூர்த்தி , கொள்கை பரப்புச் செயலாளர் பி. எஸ். அன்புதாசன், சி.பி. அயோத்தி உள்ளிட்ட மாவட்ட ,நகர கிளை நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.