ஆம் ஆத்மி கட்சியின் (தமிழ்நாடு)பொங்கல் விழா கொண்டாட்டம் நிகழ்வு!

சென்னை:சென்னை 100 அடி சாலை, பெரியார் பாதையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநில மகளிர் அணியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு மாநில மகளிர் அணி செயலாளர் மற்றும் மாநில குழு உறுப்பினர் ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆத்மி கட்சியின் தமிழக மாநில தலைவர் வசிகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்

இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜோசப்ராஜா. மாநில மனித உரிமை பிரிவு செயலாளர் ஏ.டி.முருகன்,
வடசென்னை மாவட்ட தலைவர் பாரூக், மாவட்ட செயலாளர் சோபியா, மாவட்ட துணை செயலாளர் சுரேந்திரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன்,
மாநில மகளிரணி பொருளாளர் கைசர், விழுப்புரம் துணை செயலாளர் விஜயகுமார், வட சென்னை துணை தலைவர் ரவுப், வட சென்னை மகளிரணி தலைவர் காஞ்சனா, வழக்கறிஞர் ஜெயக்குமார், பார்வதி, கிருஷ்ணவேணி, ராதாகிருஷ்ணன் ,ஆண்டனி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளான கலந்துகொண்டனர்.