நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி, தெத்துக்காடு அருந்ததியர் பகுதியைச் சார்ந்த மணி (60) என்பவரை நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்த சித்ரா (மாற்று சமுதாயத்தைச் சார்ந்தவர்) என்பவர் மணி என்பவரை பொது இடத்தில் அவமதிக்கும் உள்நோக்கத்தோடு இழிவு படுத்தி தகாத வார்த்தைகளில் பேசி, பணத்தை உரிய நேரத்தில் தரவில்லை என்றால் பெட்ரோலை ஊற்றி கொன்று விடுவேன் என தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யாத சேந்தமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களை கண்டித்தும்,வன்கொடுமை வழக்குகளில் மெத்தனப் போக்கோடு செயல்பட்டு வரும் புதுச்சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் அரசு பொது ஊழியராக இருந்து கொண்டு பட்டியலின மக்கள் கொடுக்கக்கூடிய புகார் மனுக்கள் மீது அலட்சியம் காட்டி வருவதால் அவர்கள் மீது SC /ST Act sec 4(1)- ன் கீழ் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு அரசையும், நாமக்கல் மாவட்ட காவல்துறையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டச் செயலாளர்
முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்.இளமுருகன்
மாவட்ட இணை செயலாளர்,
தோழர்.குமரவேல்
மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர்.
தோழர்.கோபி
மாவட்ட அமைப்புச் செயலாளர்,
தோழர்.சிலம்பரசன்
மாவட்ட தொண்டர் அணி செயலாளர்
தோழர். ராஜா
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தோழர். கவி வள்ளுவன்
மாநில மாணவர் அணி துணை செயலாளர்,
தோழர். அழகுமணி
மாநிலச் செயலாளர்
கரும்புலி குயிலி பேரவை,
தோழர். உதயபிரகாஷ்,
மண்டல செயலாளர் (நாமக்கல், சேலம்)உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தோழர். வீரமணி
புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்டன ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நன்றி உரை நிகழ்த்தினார்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு குமாரபாளையம் மாவட்ட செயலாளர் தோழர். அழகேசன், நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர் சிவகுமார், மோகனூர் ஒன்றிய செயலாளர் தோழர் செல்வராஜ் மற்றும் கட்சியின் மாவட்ட, மாநகர,ஒன்றிய , கிளை செயலாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் திறளாக கலந்து கொண்டனர்.