சென்னை:பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து லாங்க் கார்டன் சாலையில் மாபெரும் கண்டன பேரணி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில்
நடைபெற்றது.

மேலும் இந்த மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் நாகை. திருவள்ளுவன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் த. குமரவேல் உள்ளிட்ட சுமார் 600- க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி, இயக்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தோழர்கள், பொதுமக்கள் மாபெரும் பேரணியில் கலந்து கொண்டு காசா மீதான இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.