நாமக்கல்:
இன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட தலைமை உயர்மட்ட நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றெடுக்கும் விதமாக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து பொதுமக்கள் மத்தியிலே களம் கண்டு வரக்கூடிய தமிழ்ப்புலிகள் கட்சியினுடைய நிர்வாக கட்டமைப்பினை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு, தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வரக்கூடிய நாமக்கல் தொகுதி மாவட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகளாக மூன்று நபர்களும், உயர்மட்ட குழு உறுப்பினர்களாக மூன்று நபர்களும் தேர்வு செய்து எதிர் வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அதிகாரத்தைப் பெற்றிடவும், எதிர் வரக்கூடிய 2031- ல் சட்டமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் வாய்ந்த தமிழ்ப்புலிகள் கட்சியாகவும், தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக செயலாற்றும் வகையில் நாமக்கல் தொகுதி முழுவதும் பட்டி, தொட்டி எங்கும் தமிழ் புலிகள் கட்சியினுடைய கொள்கைகள் கோட்பாடுகளை எடுத்துக் கூறி மக்களுக்கான பணிகளையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக் கூறி பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது என்று நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர். குமரவேல் தெரிவித்துள்ளார்.
இந்த நிர்வாக கூட்டத்தில் நாமக்கல் தொகுதி மாவட்டத் துணைச் செயலாளர் தோழர். இளமுருகன், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர்.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.