ஒரே நாளில் 2000 குடும்பகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி அசத்திய தந்தை – மகன்
திருவொற்றியூர் : மே, 17
கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மற்றும் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவொற்றியூர் 7வது வட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், வாழ்வாதாரம் இழந்து வசித்து(தவித்து) வரும் சுமார் 2000 ஏழை எளிய குடும்பகளுக்கு அரிசி , பருப்பு,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு 7 வது வார்டு வட்ட செயலாளர் எம்.கண்ணன் சிறப்பாக செய்திருந்தார். இதில் முன்னாள் கவின்சிலர் இ.வேலாயுதம் எஸ்.பி.புகழேந்தி, விம்கோ கே.லெனின், எம்.முருகன், ராஜீ, ஏழுமலை உள்ளிட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ராஜ்குமார் – செய்தியாளர்
(யுகம் நியூஸ்)
