பெருமாள்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியின் 42வது ஆண்டுவிழா கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மூன்றாம் ஆண்டு மாணவர் கௌசிக் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி. ஆர். ரமேஷ்பாபு, ஸ்ரீராம் கலை(ம) அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. சரவணன்
மற்றும் ஸ்ரீராம் வித்யாமந்திர் பள்ளியின் முதல்வர் எஸ். எஸ்.ஸ்ரீனிவாசன்
ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Digiedze Soft Solution Pvt.Ltd நிறுவனத்தின், அசோசியேட் டைரக்டர் பூபதி துரைவேல் அவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வி. தத்தாத்ரேயா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.
மூன்றாம் ஆண்டு மாணவி எம். வினிதா நன்றியுரை ஆற்ற நாட்டுப்பன்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.
