எழும்பூர்:
சென்னை சமூகப்பணி கல்லூரி- சமூகப்பணி துறை சார்பில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குறித்து தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் நிலைத்த முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக நடத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
இதில் கல்வியாளர்கள், சமூகப்பணியாளர்கள், கொள்கை நிர்ணயர்கள் மற்றும் சமூக மேம்பாட்டு நிபுணர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முனைவர்.ரூத் மனோரம்மா அவர்கள் கலந்துக் கொண்டு சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்து விரிவாக பேசினார்.

மேலும் சிறப்பு அழைப்பாளர் முனைவர். சத்தியகோபால் கொர்லாப்டி (இ.ஆ.ப ஓய்வு) அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சியின் அவசியம் பற்றி விளக்கி பேசினார். மேலும் முக்கிய உரையை அழகப்பன் ராமநாதன் அவர்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சமூகப்பணியாளர்களின் பங்கு முக்கியமானது என்று வலியுறுத்தி பேசினார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு அமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

மேலும் இந்நிகழ்வில் பெண்களின் நலன், மனித உரிமை மற்றும் சமத்துவம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, மனித வளம் மற்றும் சமூக தொழில்முனைவு போன்ற தலைப்புகளில் நிபுணர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் அறிவுப் பகிர்வு, கொள்கை விவாதம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான மேடையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் சென்னை சமூகப்பணி கல்லூரியின் முதல்வர் முனைவர்.எஸ்.ராஜா சாமுவேல், கல்லூரி தலைவர் முனைவர்.கே.ஏ.மேத்யூ அவர்கள்,
கல்லூரி டீன் முனைவர்.ஆர் சுபாஷினி ,சமூகப் பணித் துறையின் தலைவர் முனைவர். ஏ.ஈனாக் மற்றும் கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பி .ஜெசுவின் ஜான் போஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.