காரப்பாக்கம்:
திருகுகன் தென்னகத்து போர்வீரர்கள் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் எஸ்விபி ராவணன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம்
இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனர்கள் லஷ்மிபதி மற்றும் முகிலன் ஆகியோரின் தலைமையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி சென்னை காரப்பாக்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் கானல் ஐயா முத்துகிருஷ்ணன் மற்றும் லைப் லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சிலம்பம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திறளாக கலந்துக்கொண்டனர்.
இறுதியில் சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

