எழும்பூர்:
தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை, ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 585 இயன்முறை மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்கின்றனர். இதில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டாரத்திற்கு ஒரு இயன்முறை மருத்துவரும், தலைமை மருத்துவமனைகளில் சுமார் இரண்டு இயன்முறை மருத்துவர்களும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் டிஇ.ஐ .சி மற்றும் ஜிரியாற்றிக் பிரிவுகளில் தலா ஒரு இயன்முறை மருத்துவரும் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆரம்ப கால நோய் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு அதில் ரூபாய் 10 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயன்முறை மருத்துவர்கள் பணியமர்த்தப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தொற்று நோய் பிரிவில் இயன்முறை மருத்துவப் பிரிவு சேர்க்கப்பட்டு அதில் தமிழகம் முழுவதும் 385 இயன்முறை மருத்துவர்கள் கிராமப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டனர்.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினக்கூலி மற்றும் குறுகிய கால திட்டங்கள் அடிப்படையில் இயன்முறை மருத்துவர்கள் பணியமடுத்தப்பட்டனர்.
அது முதல் இன்று வரை மருத்துவ பயனாளிகளின் நோய்களை கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்கவும் அவர்களின் வாழ்வை மீட்டெடுக்கவும் கடுமையாக உழைத்து வருகின்றோம்.
இயன்முறை மருத்துவத்தை பொருத்தவரையில் உடல் உழைப்பும், நோய் கலந்தாய்வும் மிகவும் அதிகம். மருத்துவ பயனாளர்களின் புனர்வாழ்வு (Rehabilitation) சிகிச்சையில் இயன்முறை மருத்துவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இன்றைய காலகட்டங்களில் மருத்துவத்துறையில் இயன்முறை மருத்துவத்தின் பங்களிப்பு உழைப்பும், மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் தகுதிக்கும் உழைப்புக்கும் ஏற்ற ஊதியமும் வழங்கப்படாமல் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை மறு பரிசீலனை செய்து தகுதிக்கேற்ப ஊதிய நிர்ணயம் செய்யக்கோரி அரசிடமும்,துறை சார்ந்த அதிகாரிகளிடமும் துறை அமைச்சரிடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உலக சுகாதார நிறுவனமும் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தனிப்பட்ட மருத்துவ பிரிவாக அங்கீகரித்துள்ளது .
2264 மருத்துவர்கள் தனித்து மருத்துவ சேவை வழங்கவும் உரிய நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் வகையிலும் நேஷனல் கமிஷன் ஃபார் ஆணையம் ஹெல்த் கேர் 2021 எங்களுக்கு வழிவகை செய்துள்ளது. எனவே தகுதிக்கேற்ப ஊதிய நிர்ணயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மேலும் கீழ்காணும் கோரிக்கைகள்:
குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 35 ஆயிரம் நிர்ணயம் செய்திட வேண்டும்,அனைத்து
நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் இயன்முறை மருத்துவர்களை ஒப்பந்த முறைக்கு மாற்றம் செய்திட வேண்டும்,ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடுஅரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த உண்ணாவிரத போராட்டமா முன்னெடுக்கப்பட்டது.

இந்த அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக
தோழர் சண்முகம் அவர்கள்.
மாநில பொதுச் செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
தோழர் டாக்டர் ரவீந்திரநாத் அவர்கள்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
திரு சீமான் அவர்கள்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
நாம் தமிழர் கட்சி,
திரு. ராஜதுரை அவர்கள் மாநில தலைவர் கூட்டமைப்பு சங்கம்,
தோழர் சரோஜா அவர்கள்
பூவுலகை பாதுகாக்கும் சங்கம்,
டாக்டர்.அமர்த்திப் விஜயகுமார் MPT,
Farmer Treasurer Association Physiotherapists
(AF State Grievance Committee Co-Chairperson,
Sasikumar PT
மாநில பொதுச் செயலாளர்
Tamil Nadu Physiotharapy Wortare Association (TNPWA) உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.