கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு திருவொற்றியூர் மக்கள் பாராட்டு

திருவொற்றியூர் : மே, 12

கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மற்றும் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவொற்றியூர் 4வது வட்டத்தில் உள்ள ஜோதி நகர், டி.எஸ்.கோபால் நகர் மற்றும் முருகப்பா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், வாழ்வாதாரம் இழந்து வசித்து(தவித்து) வரும் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பகளுக்கு அரிசி , பிரட்,பருப்பு,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினர்.

இதில் முன்னாள் கவின்சிலரும், இ.வேலாயுதம் புகழேந்தி, விம்கோ லெனின் உள்ளிட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் அப்பகுதிவாசியான
வசந்தி என்பவர் கூறும்போது:-
குப்பன் அவர்கள் கருணை கடவுள்மக்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் எங்களுடைய கஷ்டத்தை உணர்ந்து உதவி செய்துவருகிறார்.
ஒரு மாதத்திற்கு தேவவையான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உள்ளார். எங்களை போன்ற ஏழைகளுக்கு உதவும் அவருடைய நல்ல உள்ளத்திற்கு எங்கள் பகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.

ராஜ்குமார் – செய்தியாளர்
(யுகம் நியூஸ்)