சேப்பாக்கம்: சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது இச்
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.உ.ஷாஜகான் அவர்கள் பேசியதாவது:
மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுனர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் இரண்டு முதல் நான்கு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆய்வக நுட்புனர்களுக்கு ஒரு கட்ட பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, எனவே இரண்டாம் கட்ட பதிவு உயர்வு பணியிடமான தலைமை ஆய்வக நுட்புனர் அலுவலர் (CLTO)பணியிடங்களை புதிதாக உருவாக்கிட மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகங்களின் பரிந்துரையை விரைவில் அமல்படுத்த வேண்டும், மேலும் எம்.ஆர்.பி யின் ஆய்வக நுட்புனர் நிலை II நேரடி நியமனத்திற்கு கல்வி தகுதியை DMLT, Bsc MLT என நிர்ணயம் செய்யும்மாறு கேட்டுக் கொள்கிறோம்,தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றுகாலத்தில் பணியாற்றிய ஆய்வக நுட்புனர்களுக்கு ஆய்வக நுட்புனர் நிலை II நேரடி நியமனத்தில் சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைப்பதாகவும், தமிழக அரசு எங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்,இரத்த வங்கிகளில் ஆய்வக நுட்புனர் காலி பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்,தொகுப்பூதியத்தில் உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தி பேசினார். அப்போது கௌரவ ஆலோசகர் சாந்தலிங்கம், மாநிலச் செயலாளர்கள்
மணிகண்டன், குலாம் முகமது,பயிற்சி மாணவர் ரித்திக் ஆகியோர் உடனிருந்தனர்.