சென்னை:
சென்னை மாநகராட்சியால் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு
மீண்டும் பணி வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியாளர்
களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்,
தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரில்
கடந்த 01.08.2025 முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.
