சென்னை :
ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் ஆஃப் புளூவேவ்ஸ் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு விழா சென்னை, பெசன்ட்நகர், திருவள்ளுவர் நகர்,சமுதாய நலக்கூடத்தில்
ரோட்டரி கிளப் ஆப் ப்ளுவேவ்ஸ் தலைவர் வி.கோபி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் செயலாளர் எம்.வி.சுந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

ரோட்டரி கம்யூனிட்டி கார்ப்ஸ் 3234 தலைவர் ஜெ. சாந்தி ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை
தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி கிரீன் சிட்டி வழிகாட்டி எஸ்.எம்.பி என்கிற எஸ்.எம்.பாலசுப்ரமணியன், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் லீலாதேவி, பழைய வண்ணாரப்
பேட்டை காவல் ஆய்வாளர் ராஜாராம், அடையார் சாஸ்திரி நகர் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் துர்கா தேவி, வேளச்சேரி காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தங்கராஜ், சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இதில் காவல் பிரிவு ஆய்வாளர்கள் எஸ். சாமுண்டீஸ்வரி, எம். புஷ்பா ரோட்டரி கிளப் புளுவேஸ் ஆலோசகர் ராஜரத்தினம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியின் முடிவில் கிரிதர் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் அனைவருக்கும் இயற்கை சிற்றுண்டியாக பழங்கள்,
பழச்சாறு,வேர்க்கடலை சுண்டல்,
வேகவைத்த கிழங்கு, மூலிகை டீ வழங்கப்பட்டது.
