கள்ளக்குறிச்சி: கடந்த ஜுன் 21 மற்றும் ஜுன் 22 இரு தினங்களில்
அகில உலகத் தமிழ் கவிஞர்கள் அறக்கட்டளை(தமிழ்நாடு)கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் முத்தமிழ் கலை இலக்கிய பசுமை நிகழ்ச்சி நூல் வெளியீடு மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் உலக சாதனை விருது வழங்கும் விழா நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜி.வி.மஹாலில் இதன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தலைவர் திருமதி.வித்யா கோபாலன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வு அகில
உலகத் தமிழ் அறக்கட்டளை (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்புக்குழு ஆலோசகர் திரு.அகன் என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் இதன் நிறுவன தலைவர் எழுத்தாளர் சௌ.நாகநாதன் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச்சங்க நிறுவன தலைவர் சொல்லின் செல்வர் கலைமாமணி திரு.ஆவடிக்குமார், தொல்லியல் ஆய்வுக்கழக இயக்குநர் பேராசிரியர் சி.இலக்குமணன்
கவித்திலகம் திரு.வெற்றிப்
பேரொளி, முனைவர் கண்மணி கண்ணன், மாநிலச் செயலாளர் திருமதி கே.கல்பனா உள்ளிட்ட
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.



மேலும் இந்நிகழ்வில் மரக்கன்றுகள் நடுவிழா, கவியரங்கம்,பட்டிமன்றம், மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ,சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் வளரும் இளம் தலைமுறையினர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் தமிழ் சான்றோர் மற்றும் உலக சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தியாகியர்களை நினைவுபடுத்தும் உயரிய நோக்கில் சுமார் 40 ஆளுமை தியாக செம்மல்களின் திருவுருவ படங்களை விழா நாயகர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களால் திறக்கப்பட்டது.

