சேப்பாக்கம்:
சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எல். இரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ரவி அவர்கள் கூறியது :இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது .

மேலும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிடுவது என்றும்
ஒருமித்த கருத்துடைய கட்சி மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வருகின்ற 2026 தேர்தல் சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்
களூம் மாநில தலைவருக்கு உண்டு என்றும், தமிழக அரசு டாஸ்மார்க் ஊழல் புகார்களை பதியப்பட்ட 41எஃப்.ஐ.ஆர் மீது உடனடியாக விசாரணை முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதேபோல் டாஸ்மார்க் ஊழலை பற்றி சட்டமன்றத்தில் வெள்ளறிக்கை வெளியிட வேண்டும். மதுவை ஒழிப்பேன் என்று ஆட்சி பீடத்திற்கு வந்த திமுக அதை நிறைவேற்றாததை கண்டிக்கத்தக்கது என்றும் , மனிதர்களால்
நாள்தோறும் மகளிர்கள் சிறுமிகள் பல்வேறு விதத்தில் பாதிக்கப் படுவதாகவும் எனவே அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் லஞ்சம் ஊழலை கட்டுப்
படுத்த தவறிய திமுக அரசு மீது வருகின்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்

இந்த செயற்குழு கூட்டத்தில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் .டி.சிவஞானசம் பந்தம், மயிலாம்பாறை மாரி, பழனியம்மாள், பத்து ரூபாய் இயக்கம் பாஸ்கர், வழ.சிதம்பரம், ராமமூர்த்தி, அரவிந்த், பழனியப்பன், அருள்தாஸ், ராஜமாணிக்கம், சலீம், ராமா ராவ், கண்ணன் மற்றும் ஆர்.தனசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.