சென்னை:
பத்து ரூபாய் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் சமூக ஆர்வலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் அறியும் சட்டம் உரிமை குறித்தும் அதை கையாண்டு நமக்கான தீர்வுகளை பெறும் நுணுக்கங்கள் குறித்தும், விழிப்புணர்வும்,பயிற்சியும் கொடுத்து வருகிறது .இதன் தொடர்ச்சியாக எழும்பூர் பாந்தியன் சாலை பகுதியிலுள்ள இக்சா அரங்கில் வழக்கறிஞர் டாக்டர்.நல்வினை விஸ்வராஜ் அவர்கள் தலைமையில் இலவச சட்டப் பயிற்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி சிறப்புற நடைப்பெற்றது.

இதில் சமூக ஆர்வலர்களுக்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் எப்படி இணையதளத்தில் கோரிக்கை மனுக்களை அனுப்ப வேண்டும் குறித்த பயிற்சியும் எடுக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் திருமுருகன் ,RTI தகவல் போராளி, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சுய வழக்காடி வீ. கிருபானந்தன், RTI தகவல் போராளி, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே. பாஸ்கர், மாநில செயலாளர் .பா. ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி
தி.மகேந்திரன், சென்னை மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கலந்துக்கொண்டனர்.