தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தி.நகர் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.பிரிவு சார்பில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட,மக்களின் குடியை கெடுக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு மாநில தலைவர் கு.செல்வ பெருந்தகை அவர்கள் தலைமையில் சென்னை தி.நகர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு மாநில துணைத்தலைவர் நா.கிஷோர்குமார்,
எஸ்.சி பிரிவு வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர்
ஆர்.புரட்சித்சந்திரன் மற்றும் தாமரைச்செல்வி ஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கொரோனா பெரும் தொற்று பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு தடை உத்தரவால் பாதிப்படைந்து, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை,எளிய 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு , எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்டவைகள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

