வாணியம்பாடி : மே,08 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடகரை பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடையில்
மதுபான பாட்டில்கள் தீர்ந்துவிட்டதாக அறிவித்துவிட்டு அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முயற்சித்தனர். அதனை வீடியோ பதிவு செய்த கேப்டன் டிவி செய்தியாளர் ஆனந்தன் அவர்களுடைய செல்போனை காவலர்கள் பறித்து மிரட்டல் விட்டதாக தெரிகிறது இதுபோன்று பத்திரிக்கையாளர்களை காவலர்கள் மிரட்டுவதும் பொய் வழக்குப்போடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் காவலர் காந்தி ஆகியோர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்பாக உள்ளது