அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு
அண்ணா நகர் : கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைபடுத்தி வருவதால் ஏழை,எளிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் பொருளாதார நெருக்கடியிலும், வாழ்வாதாரமின்றியும் தவித்து வருகின்றனர்.இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் நோக்கில் அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பான அரிசி, கோதுமை ,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா நகர், எம்.ஜி.ஆர். காலனியில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்வாதாரமின்றி இன்னல்களை சந்தித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா நகர் மேற்கு பகுதி 100-வது வட்டக் கழக செயலாளர் ஏ.எஸ்.ராஜூ அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் குடிசை மாற்று வாரியம் உறுப்பினரும், அண்ணா நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளருமான டி.திருவள்ளுவன், அண்ணாநகர் மேற்கு பகுதி இளைஞரணி செயலாளர் கே.என்.ரமேஷ், அண்ணாநகர் மேற்கு பகுதி 100-வது வட்ட இளைஞரணி செயலாளர் கோபிநாத் , அண்ணாநகர் மேற்கு பகுதி 100-வது வட்ட துணைச் செயலாளர் ஞானசெளந்தரி, அண்ணாநகர் மேற்கு பகுதி 100- வது வட்ட பொருளாலர் எம். மார்கண்டேயன்,
அண்ணாநகர் மேற்கு பகுதி 100- வது வட்ட பேரவை துணைத் தலைவர் கோ.கோவரதன், அண்ணாநகர் மேற்கு பகுதி 100- வது வட்ட சிறுப்பான்மை பிரிவு தலைவர் வி.ராபர்ட் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
