ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன்

திருவொற்றியூர் : மே, 04

கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு தடை உத்தரவால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் , தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவெற்றியூர் 7வது வட்டத்தில் உள்ள காந்தி தெரு , ராஜீவ் காந்தி நகர் , அண்ணாமலை நகர் ,நேரு நகர் , ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் இழந்து வசித்துவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப களுக்கு அரிசி , பருப்பு,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட செயலாளர் எம்.கண்ணன்,அதிமுக நிர்வாகிகள் வேலாயுதம், எஸ்.பி.புகழேந்தி,முருகன்,ரவி, லெனின்,ராஜி,ஏழுமலை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.