திருவொற்றியூர்:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு நிகழ்வு திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், வழக்கறிஞர்
டாக்டர் ஜி.சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் திருவொற்றியூர் சார்பு நீதிமன்ற நுழைவாயில் அருகில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் சட்டத்துறை செயலாளரும்,
மூத்த வழக்கறிஞருமான பாராளுமன்ற உறுப்பினருமான என். ஆர். இளங்கோ அவர்களின் ஆலோசனையின் படி வடக்கு மண்டலம் -1 பொறுப்பாளர்கள் மற்றும் சட்டத்துறை இணைச்செயலாளர் ஜே. பச்சையப்பன் மற்றும் சட்டத்துறை துணைச்செயலாளர் கே.சந்துரு ஆகியோரின் மேற்பார்வையில், சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்களின் வழிகாட்டுதலுடனும், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் மன்டல குழு தலைவரும், கிழக்கு பகுதி செயலாளருமான தி.மு. தனியரசு மற்றும் மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன் முன்னிலையில் ஆகியோர் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அரசு வழக்கறிஞர்களான என்.ஜெய்சங்கர், எஸ்.பொன்னி
வளவன் மற்றும் வழக்கறிஞர்கள் சென்னை வடகிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ஜெ.பாலமுருகன், சி. தன்ராஜ், எஸ். சக்திவேலன்,
கே.ஆர்.எஸ் செந்தில்ராஜா, என்.சரவணன் எஸ்.தரணி, பொன்.கோ. விஜயன்,
பி. சங்கர், எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் இதில் வழக்கறிஞர்கள்
பரதன், தாமோதரன், செங்குட்டுவன், சுரேந்தர், கண்ணன், பிரவீன், மணிகண்டன், தாங்கல் சரவணன், மகேந்திரன், மரியாசேகர், ராஜலட்சுமி, நளினி, விஜயலட்சுமி, சாருமதி, சாகுல், மோகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.