திருப்பூர்:
தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை மற்றும் 25வது ஆண்டு விழா குறித்த கலந்தாலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டத் தலைவர் மயில்சாமி மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமையில் திருமுருகன் பூண்டியிலுள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் சிறப்புற நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்ட செயலாளர் முருகவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முனைவர். பொழிசை எ. சிவராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு விழா
ஜனவரியில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நடைபெறும் என்றும், எந்த மாவட்டத்தில் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் சந்திரா , மாநில கமிட்டி உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகியுமான சரஸ்வதி, மாநில கமிட்டி உறுப்பினரும், திருப்பூர் மாவட்ட மகளிரணி தலைவியுமான பரமேஸ்வரி உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திறளாக கலந்துக்கொண்டனர்.

இறுதியில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் எஸ்.அர்ஜுனன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
