குன்றத்தூர்:
சென்னை, குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும் அப்துல் மஜீத் மற்றும் பர்வீனா தம்பதியரின் மகளான எம். சனா என்பவர் சிறப்பு குழந்தை ஆவார்.

இவர் பல்வேறு துறைகளில் உரிய பயிற்சி பெற்று சாதனைகளை நிகழ்த்தி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள்ளார். மேலும் இவரின் உலக சாதனை குறித்து இதன் நிறுவனத்தலைவர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் கூறுகையில் சிறப்பு குழந்தையான மாணவி சனா அவர்கள் 32 கிலோமீட்டர் வரை நடந்து நடைப்பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இவர் ஷாட் புட், , நீச்சல், உயரம் தாண்டுதல், 27 கி.மீ ஹைக்கிங் ட்ராக்கிங், கீ போர்டு வாசித்தல் மற்றும் யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்து வருவதை பாராட்டி, ஊக்கபடுத்தும் விதமாக குன்றத்தூர் – ஸ்ரீ பெரும்பத்தூர் சாலையில் மேடை அமைத்து மாணவி சனா அவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் “பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சிறப்பு குழந்தை மாணவி” என்கிற உலக சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது என தெரிவித்தார்.
