திருவொற்றியூர்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞரை படுகொலை நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் தலைவர் தொண்டன் சுப்பிரமணி அவர்கள் தலைமையிலும், துணைத்தலைவர் ஹரிகுமார் , கூடுதல் இணைச் செயலாளர் சாருமதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நரேந்திரகுமார், ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலையில் திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தன்ராஜ், கமலதாசன்,
வெங்கடேசன், தரணி, ரமேஷ் வசந்தகுமாரி, காஞ்சனா, தமிழ்செல்வன், இன்பநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்,கலந்துக்கொண்டு கண்டன குரல் எழுப்பினர்.
