கன்னியாகுமரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்
(TNCCF) சார்பில் உறுப்பினர்களுக்கு ஆடு வழங்கும் திட்டம் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஓன்றியத்திற்குட்பட்ட பைங்குளம் கிராமத்தில் மகளிர் நல மாநில துணைத்தலைவி மற்றும் மாவட்ட மகளிர் நல தலைவி ரோஸ்லி அவர்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளர் ரேகா அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட உறுப்பினர்களுக்கு கே. விஜூ முன்சிறை,கே.
கிருஷ்ணன் விஜயகுமார் ஆகியோருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்
(TNCCF) மூலமாக கடனுதவியுடன் ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் கராத்தே
ஐ. கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு பயனாளர்களுக்கு ஆடுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.