சிவகாசி:
புது யுகம் தொலைக்காட்சி சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்ற விவாத நிகழ்ச்சி
சிவகாசியில் உள்ள மீரா வைரம் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியின் போது கண் தானம் குறித்த விழிப்புணர்வில் தொடர்ந்து சிறந்து விளங்கும் சிவகாசி டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு கண் பார்வை காப்பாளர் என்கிற விருதை நிகழ்ச்சியின் நடுவர் டாக்டர் ஜெய.மூர்த்தி அவர்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் இந் நிகழ்ச்சியில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் அவர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தார்.