சென்னை: திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த அட்டவணை வகுப்பை சேர்ந்த பேராசிரியர் சி.என்.எஸ்.ராம்நாத் பாபு அவர்களை, அந்நிறுவனத்தின் இயக்குநர் திரு. அசித் குமார் பர்மா சாதிய காழ்புண்ர்ச்சியுடன் பணிநீக்கம் செய்த விவகாரம் மற்றும் பொதுநிதி பெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பள்ளியான BIM நிறுவனத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்றுதல், மற்றும் தனியார் நிறுவனமாக மாற்றி அமைப்பதையும் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.

அப்போது, முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான முருகேஷ் ராமையா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது: திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (Bharathidasan Institute of Management – BIM), பேராசிரியர் ராம்நாத் பாபு அவர்களை சாதிய காழ்புண்ர்ச்சியுடன் குறிவைத்து தவறான முறையில் அநியாயமாக பணிநீக்கம் செய்த விவகாரம் குறித்தும், பொதுநிதி பெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பள்ளியான BIM நிறுவனத்தை, அதன் ஆட்சிக்குழுவில் உள்ள சில தனியார் முதலாளிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்றுதல், மற்றும் தனியார் நிறுவனமாக மாற்றி அமைக்க முயற்சிகள் நடப்பதாக குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 1984 இல், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), இவைகளின் கூட்டு முயற்சியாக, BHEL, திருச்சி டவுன் ஷிப்பில் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் (Bharathidasan Institute of Management) தொடங்கப்பட்டது. BDU இன் “School of Excellence” என்கிற அந்தஸ்துடன், தொடங்கிய நாள் முதல் Autonomous Status உடன், சுதந்திரமான ஒரு நிர்வாகக் குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. BIM, BDU-வின் ஒரு துறையாக இருந்து, தொடக்கத்திலிருந்தே BDU மூலம் நிதி அனுசரணை (Sponsorship) பெற்று வந்தது.

அங்கு பணிபுரிந்த SC/ST சமூக ஆசிரியர் முனைவர் ராம்நாத் பாபு அவர்கள் மீது மேற்கு வங்கத்தை சேர்ந்த BIM இயக்குனர் அசித் குமார் பர்மா சாதிய பாகுபாடு, காழ்ப்புணர்ச்சியுடன் பணியிடத்தில், அவருக்கு நெருங்கிய பேராசிரியர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, மாணவர்களை அவருக்கு எதிராக தூண்டி விட்டு, நேரடியாகவும், மறைமுகமாகவும் துன்புறுத்தி சட்ட விதிமுறைகளை பின்பற்றாது, அவரின் PROBATION PERIOD முடிந்த, 84 வது நாள், எந்தஒரு விசாரணையும் இன்றி இயற்கை நீதி நெறிகளை பின்பற்றாது, BIM-ஐ ஒரு SC/ST ஆசிரிய உறுப்பினர்கள் இல்லாத நிறுவனமாக தொடர்ந்து காக்கும் முயற்சியில் அநியாயமாக பணிநீக்கம் செய்தார்.

இயக்குனர் அசித் முனைவர் சி.என்.எஸ் .ராம்நாத் பாபுவுக்கு எதிராக கூறிய சில அவமதிப்பான கருத்துக்கள் கூறியது கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  • “Your perception is Pathetic. Perception not only in academic, but also as a person, as a faculty how do you see it”
  • “You are free to write … appeal to anyone, if you want you can go to the court. Whatever you want… you can write to anyone., you can appeal to anyone you meet the Chairman, you meet all the board members, you can do whatever you want”
  • “You work on your profile, and be on the lookout, whatever reference, recommendations you need, whatever support you need I will give you. The only thing that I cannot continue with you, if you are capable, you get a job. Once you get a job, I will say that you have resigned on your own for better prospects. I will change the relieving order that way.
  • “If I offer you course to teach, I will not get the admissions here at BIM”
  • “You first look at opportunities because teaching is not… you know… kind of… cannot be your profession, right profession”
  • “You don’t do teaching. Teaching cannot be, and it should not be your pie of your profession.
  • “Look for opportunities at NITs, IITs. IIMs to obtain privileged benefits”

இந்த உதவி பேராசிரியர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். BIM தொடங்கப்பட்ட 1983 ஆண்டு முதல் தேர்வு செய்யப்பட்ட, BIM மின் முதல் மற்றும் ஒரே SC/ST ஆசிரிய உறுப்பினர் இவர் மட்டுமே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற பல ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் அவர்களின் ஓய்வு கால நன்மைகள் (பென்ஷன்) கிடைக்காது மதுரை கிளை சென்னை உயர்நீதி மன்றத்தை நாடி உள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒரு அலகான பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட குற்றச்சதி எவ்வாறு நடந்தது?
2003 மற்றும் 2004 ஆண்டுகளில் நடைபெற்ற, 54வது மற்றும் 55வது சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள், நிர்வாக ஆட்சிக்குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தற்போதைய தலைவர் ரவி அப்பசாமி இன், சென்னை ரெசிடென்ஸி ஹோட்டலில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் டாக்டர் முத்தையா மாரியப்பன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், நேர்மையற்ற நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிறப்பு தீர்மானத்தின் மூலம் BIM விதிகளை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்தனர்.

தமிழ்நாடு உயர் கல்வித் துறையின் ஒப்புதலின்றி, BIM விதிமுறைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள், BIM மீதான BDU-வின் கட்டுப்பாட்டை நீக்கியது. மேலும், நேர்மையற்ற நிர்வாக ஆட்சிக்குழுவினரால், சட்டவிரோதமாக செய்யப்பட்ட Bylaws மாற்றங்கள், BIM நிர்வாகத்தையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்ற வழிவகுத்தது, இது நிலம் அபகரிப்பிற்கு ஒத்ததாகும். இந்த திருத்தங்களின் விளைவாக, பல்கலைக்கழக துணைவேந்தர், PRO-துணைவேந்தர், யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ மற்றும் உயர் கல்வி துறையின் பிரதிநிதிகள் போன்ற அனைத்து அரசு சார்ந்த உறுப்பினர்களும் நிர்வாகக் ஆட்சிக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். மற்றும் வெளியேற்றப்பட்டனர்.

BIM நிர்வாகம், அன்றைய ஆளுநர் மாண்புமிகு P.S.Ramamohan Rao அவர்கள், BIM இன் சட்ட மாற்றங்களுக்குக் ஒப்புதல் அளித்து விட்டார் என்று கூறிக்கொண்டு, இனி BIM ஒரு PRIVATE AND INDEPENDENT நிறுவனம் என்றும், BIM ஐ பாரதிதாசன் பல்கலைக்கழகமோ அல்லது மாநில / மத்திய அரசோ கட்டுப்படுத்த இயலாது என்றும் சூளுரைத்துக்கொண்டு, ஒரு PROPRIETORSHIP FIRM போன்று செயல்படத் துவங்கியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், “சட்ட திருத்தங்கள் ஆளுநரின் முன் வைக்கப்பட்டுள்ளது” என்பது மட்டுமே ஆகும். ஆனால், ஆளுநரின் அலுவலகம், உயர் கல்வித் துறை அல்லது பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதுவும், ஆளுநர் கையொப்பம் செய்து அனுமதி அளித்த BIM விதிமுறைகளின் உண்மையான பிரதியை அளிக்க முன் வரவில்லை அல்லது முடியவில்லை. சிறப்பு சட்டங்கள் எதுவும் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்றும் தெரிகிறது.

BIM மேலாண்மை நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக பல்கலைக்கழகத்துடன் எந்த இணைப்பும் இல்லாமல் செயல்படத் தொடங்கியது. இதனால் மாணவர்களுக்கு பட்ட படிப்பு சான்றிதழ்களை வழங்குவது தொடர்பான வழக்கு மதுரை கிளை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

போர்டு உறுப்பினர்கள் தங்களைத் தாங்களே, தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நிர்வாகக்குழுவின் உறுப்பினராக இருக்க, மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டனர். CHAIRMAN ஒருதலைப்பட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அவர்கள் விரும்பிய காலம் வரை BOARD இன் உறுப்பினராக தொடர்ந்தனர். AICTE சட்ட விதிகளுக்கு உட்படாத Retired IAS Officers போன்றவர்கள் இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர்.

தற்போதைய இயக்குனர் டாக்டர் அசித் குமார் பர்மாவின் பதவிக்காலம், BDU துணைவேந்தரின் முன் அனுமதி பெறாமல், BOARD மூலம் ஒருதலைப்பட்சமாக நீடிக்கப்பட்டது. புதிய வளாக கட்டிடத்திட்டம் BDU-வின் முன் அனுமதி பெறாமல் திருச்சிராப்பள்ளி -புதுக்கோட்டை சாலையில் தொடங்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி, இந்த மிகப்பெரிய தொகை மதிப்புடைய கட்டிடத் திட்டத்திற்கு எந்த அதிகாரப்பூர்வ டெண்டரும் அழைக்கப்படவில்லை.

2003 முதல், BIM பல்கலைக்கழகத்துக்கு மற்றும் அரசுக்கு தனது நிதி அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
மேலும் கல்வி, கல்வி சாரா, நிதி, தேர்வு துறைகளில் பல நிர்வாக சீர்கேடுகள் அரங்கேறின. ஆசிரியப்பணியில் SC/ST இடஒதுக்கீடு மற்றும், BOARD இல் SC/ST சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் கல்லூரி தொடங்கப்பட்ட நாள் முதல் அளிக்கப்படவில்லை. மாணவர் சேர்க்கையில் SC/ST இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை.

மாறாக AICTE மற்றும் UGC க்கு, BIM பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் State Government University – University Managed-Govt கல்லூரி என்று காட்டிக்கொண்டனர். BDU வும் மாணவர்களுக்கு தொடர்ந்து பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்கி வந்துள்ளது. BIM நிர்வாகம், பொதுமக்கள்/AICTE/UGC/பல்கலைக்கழகம்/அரசுக்கு தவறான, முரணான மற்றும் பொய்யான தகவல்களை தொடர்ந்து வழங்குகிறது.

மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் BDU இன் துணைவேந்தர் முனைவர் செல்வம், இயக்குனர் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்திற்கு (NCSC) எழுதிய கடிதத்தில் 03.07.2003 சட்ட திருத்தங்களுக்கு பின்பு, BIM இன் எந்த ஒரு நிர்வாக நடவடிக்கைகளிலும் BDU க்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் மாணவர்களின் நலன் கருதி, BIM இன் MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதுவும் அவ்வப்போது நீதிமன்ற உத்தரவுப்படி பல்கலைக்கழகம் பட்டப்படிப்புச் சான்றிதழ்களை வழங்குகிறது என்று தெரிவிக்கிறார். இதனால் 2003 முதல் நீதிமன்ற உத்திரவு இல்லாமல் அளிக்கப்பட பட்டப்படிப்பு சான்றிதழ்கள் செல்லுமா என்னு சந்தேகம் எழுகிறது.

W.P.(MD)No.19133 of 2023 என்ற வழக்கில் நீதியரசர் விக்டோரியா கௌரி அவர்கள் கடந்த 02.11.2023 அன்று அளித்த தீர்ப்பில், BIM என்பது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த பாடசாலை/நிறுவனம் மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஒரு அலகாகும் என்பதை கண்காணித்து எழுத்துப்பூர்வமாக தெளிவாக அளித்துள்ளார்.

இப்படி இருக்க, BIM தனியார் மற்றும் தனித்து செயல்படும் கல்லூரியெனில், ஆளுநர் ஒப்புதல் அளித்த ஆவணங்களை அதன் நிர்வாகம் நீதி மன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை? பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வித்துறை நிர்வாகங்கள் BIMஐ தனது கட்டுப்பாட்டால் எடுத்துக்கொள்ள எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் எதற்காக மௌனம் காத்து வருகின்றனர்? இந்த விவகாரங்களுக்கு தொடர்பாக, BDU உயர் கல்வித் துறைக்கு பல கடிதங்கள் எழுதியது. அதன் மீது எந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன என்பதும் முறையாக அறியப்படவில்லை

தமிழ்நாடு அரசு, BIM-ன் விவகாரங்களில் தலையிட்டு, உயர்கல்வித் துறைக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் உரிய ஆலோசனை மற்றும் உத்தரவினை வழங்கி, அரசால் நிறுவப்பட்ட BIM கல்லூரியை தவறான, நேர்மையற்ற தனி நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுக்கொண்டு அரசின் கட்டுப்பாட்டிற்குட்படுத்த வேண்டும். நடப்பு நிர்வாக சீர்கேடுகளை மற்றும் நிதி முறைகேடுகளை சரி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்க ஒரு சிறப்பு குழுவினை அமைக்க வேண்டும். அங்கு பணிபுரியும் அனைவரின் வாழ்வாதாரங்களுக்கு உத்திரவாதம் அளித்து, சமூக நீதி காக்க ஆவண செய்ய வேண்டும். ஏழை, நடுத்தர மற்றும் தாழ்த்த சமூக நிலை மக்களுக்கும் BIM – MBA படிப்பு சேர உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தங்களது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வேண்டுகோள் வைத்தனர்.

தொடர்புக்கு:
BIM Director, Dr.Asit Kumar Barma – 98102 08158
BIM Administrative Officer Mr.Kasi Vishvanathan – 94422 18295
Mr.Sathyanarayana Secretary to BIM Chairman Mr.Raviappasamy – 99620 10333
Bharathidasan University Vice Chancellor Dr. M. Selvem – +91 9486671606
Bharathidasan University Registrar Mr. Kalidass – +91 94425 25773
Dr.Ramnath Babu – 94898 88000
Advocate Mr.Murugesh Ramaiya – 97392 06710