இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு அழைப்பு விடுப்பு!

திருவள்ளூர்:
இபிஎஸ்95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் இந்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறும் கோரிக்கை விளக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினரும்,
முன்னாள் ஜஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் அவர்களை இதன் தலைவர் கே.கனகராஜ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அப்போது சங்க நிர்வாகிகளான ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஜி.எஸ். சேரன்,ஏ.கே.சந்தானகிருஷ்ணன், டி.என்.சி.எஸ்.சி. நந்தகோபால், டி.என்.சி.எஸ்.சி, பி.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முன்வைக்க கோரிக்கை விடுத்தனர்.