திருத்தணி : ஏப்ரல் , 26திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் புனிமாங்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நமக்காக தொலைக்காட்சி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் வெங்கடாபுரம் கிராமத்தில் நமக்காக தொலைக்காட்சியின் சார்பாக சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்,கிராம நிர்வாக அலுவலர், கனகம்மாசத்திரம் துணை ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கிராம பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
