தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்!
அண்ணாசாலை:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி மையங்களுக்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் சென்னை, அண்ணாசாலை, தபால் நிலையம் அருகில் நடைப்பெற்றது.
மேலும் இந்த அறப் போராட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், 2023 – 2024ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் அங்கன்வாடி திட்டத்திற்கு சென்ற ஆண்டை விட ரூ. 300 கோடி குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள், விவசாயிகளோடு இணைந்து கோரிக்கைகளுக்காக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊறியத்தை ஒருமுறை கூட உயர்த்தாத ஒரே அரசு என்ற சாதனையை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும்,
வேலை நேரம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு அதிகரிப்பு ஆகியவைகளை கருத்தில் கொண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் பணியை அரசு துரிதப்படுத்த வேண்டும்,
ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சத்துணவு மற்றும் இரண்டு கோடி பெண்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அளிக்கும் திட்டத்திற்கு போதிய நிதியை அளித்திட வேண்டும்,
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் ஊதிய உயர்வை தொடர்ந்து தாமதம், வாடகை, T.A DA சத்துணவுக்கான பணம் போன்றவை பல மாதங்களாக நிதியை விடுக்காத காரணத்தால் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், சொந்த பணத்தை வைத்து குழந்தைகளுக்காக உழைத்து
கொண்டிருக்கும் எங்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் நியாயமான ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கிடும் ஆயஷ்மான் பாரத் திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களை சேர்க்கும் அறிவிப்பு கேள்விக்குறியானதை கண்டித்தும், மாநில அரசின் காப்பீட்டுத் திட்டம் தங்களுடைய ஊதியத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை கைவிட வேண்டும்,
அங்கன்வாடி திட்டத்திற்கு நிதி ஒதுக்காமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும், ஊதிய உயர்வு வழங்காமலும் அங்கன்வாடி மையங்களை படிபடியாக மூடிவிட்டு, திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிட வேண்டும்,
ஊழியர்களுக்கு விரோதமாக செயல்படும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த அறவழிப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் திறளாக கலந்துக்கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
