பெரம்பூர் :ஏப்ரல்,22,2020:வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் மங்களபுரம்,பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதிகளில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு மாநில துணைத்தலைவர் நா. கிஷோர்குமார் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு மாநில தலைவர் கு.செல்வ பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கமிட்டி வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வில் சர்க்கிள் தலைவர் நிலவன், வடசென்னை காங்கிரஸ் கமிட்டி மாவட்ட துணைத் தலைவர் பி.அருண் பிரபு, எஸ்.சி பிரிவு வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர்கள் புரட்சி சந்திரன், எஸ்.சக்திவேல், வட சென்னை மாவட்ட எஸ்.சி பிரிவு தொகுதி தலைவர் அம்பேத்கர் சரவணன் மற்றும் கு. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
