வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கும் நிகழ்வு
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் அவர்களுக்கு
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட, கோட்டம் – 36 சூழ்புனல்கரை பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை, எளிய மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

இந்த நிகழ்வு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களின் அறிவுரையின் பேரிலும் பெரம்பூர் பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ் மற்றும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் மா. ஜெயப்பிரகாசம் ஆகியோர்களின் முன்னிலையிலும் ஏழை,எளிய மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் து.சம்பத் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் செல்வராஜ், நெல்சன், பிரேம்குமார், விஜயன், பாலுச்சாமி, இருதயராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
