போக்குவரத்துக்கு வழி பாதை கொடுக்க மறுத்ததால் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து தள்ளிய கட்டப்பஞ்சாயத்து கும்பல்!மூளையாக செயல்பட்ட கார்த்தி என்பவர் கைது செய்யப்படுவாரா???…

வாணியம்பாடி;திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனஞ்சேரி கிராமம், காளியம்மன் கோவில் வட்டம் பகுதியில் வசித்து வருபவர் பிரகாசம் . கட்டிட வேலை செய்து வரும் இவருக்கும் இவரது அம்மா குள்ளம்மாள் மற்றும் தம்பி ஜெயவேல் ஆகியோருக்கு இப்பகுதியில் சொந்தமாக 1.28 சென்ட் விவசாய நிலம் மற்றும் நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் அவர்கள் வசித்து வரும் வீட்டை சுற்றியுள்ள சுற்று சுவரை அதே கிராமத்தில் வசித்து வருபவரும் பிரகாசம் நிலத்திற்கு பின்பு பகுதியில் நிலம் வைத்திருக்கும் நடராஜன் மகன் செல்வராஜ், செல்வராஜ் மனைவி ராணி செல்வராஜ் மகன் அஜய் மற்றும் வாணியம்பாடி கச்சேரி சாலையில் கார்த்தி முடி திருத்தம் நிலையம் நடத்தும் கார்த்திகேயன் என்பவர் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட குண்டர்கள் அடியாட்களுடன் பிரகாசம் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து தகாத வார்த்தைகளை பேசி ஜேசிபி எந்திரம் மூலம் பிரகாசத்தின் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியதுடன் இதை தடுக்க வந்த ஒரு சிலரை தாக்கியதாகவும் தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஜேசிபி வாகனத்தை மடக்கி பிடிக்க முயற்சித்த போது டிராக்டர் தப்பி சென்று விட்டதாகவும் ஜேசிபி மட்டும் பிடிபட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து கிராமிய காவல்துறை விசாரணை மேற்கொண்டு செல்வராஜ், செல்வராஜ் மனைவி ராணி, செல்வராஜ் மகன் அஜய், மற்றும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட வாணியம்பாடி கச்சேரி சாலையில் கார்த்தி பியூட்டி பார்லர் நடக்கும் கார்த்திகேயன் ஆகியோர் மீது கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

செல்வராஜ் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செல்வராஜ் மனைவி மற்றும் மகன் தலை மறைவாக உள்ளதாக தகவல் தெரிய வருகிறது காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கார்த்திகேயன் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது, பிரச்சனைக்குரியவர்களை தேடி சென்று அவர்களுக்கு நியாயம் வழங்க வழி செய்கிறேன் என்று பல பேரிடம் பணம் பெற்றதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகின்றனர்.

மேலும் குற்ற விசாரணை கழகம் எனும் தனியார் அமைப்பில் மாவட்ட அளவில் பொறுப்பை பெற்றுக்கொண்டு அதன் வாயிலாக பல பஞ்சாயத்துகளில் தலையிடுவதாகவும் தகவல்கள் தெரிய வருகிறது.

மேலும் கார்த்திகேயன் காவல் நிலையங்களில் தன்னை வழக்கறிஞர் என பொய்யான தகவலை கூறி வலம் வருவதாகவும் தெரிய வருகிறது இதை காவல்துறையினரும் நம்புவது தான் வேதனையாக உள்ளது .

ஆகவே இவர் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆகவே காவல்துறை தனது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பிரகாசத்தின் சேதம் அடைந்த சொத்து மதிப்பு சுமார் மூன்று லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே இவர்கள் மீது பொது மக்களின் சொத்துக்கு குந்தகம் விளைவித்த பிரிவின் கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கார்த்தி என்பவரை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரிக்க காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போது அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதை காரணம் காட்டி தனக்கு காவல்துறையினர் மன உளைச்சல் ஏற்படுத்தி விட்டதாகவும் ஆகவே தான் தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கைது நடவடிக்கையில் இருந்து தப்ப நாடகம் ஆடி வருவதாக எதிர் தரப்பினர் கூறுகின்றனர்.

ஆகவே இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை இவர்களை போன்று பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் சொத்து சேர்ப்பவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

காவல்துறையினர் இவர்களை. கைது செய்வார்களா! பொறுத்திருந்து பார்ப்போம்!!