அரசியல் ஆதாயத்திற்காக ராமரை கையில் எடுத்திருக்கிறார்கள்:
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன்!
மதுரை:அரசியல் ஆதாயத்திற்காக பதவி வெறியோடு நடக்கும் ராமர் கோவில் விழா
பிரதமர் மோடி அவர்கள் ராமர் கோவில் விழாவை அரசியல் ஆதாயத்திறாகாக நடத்துவதோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான
வெறித்தனமான இந்துத்துவா அரசியலை முன்னெடுத்திருக்கிறார். இதில் பக்தியோ, இறை நம்பிக்கையோ மத உணர்வோ இல்லை.
இந்திய அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் விரோதமாக பிரதமர் செயல்பட்டு வருகிறார். பிரதமர் கோவிலுக்குச் சென்று வழிபடுவது தனிப்பட்ட விசயம் ஆனால் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோவிலை கட்டி அதில் சிலையை பிரதமரே பிரதிஷ்டை செய்வதன் மூலம் சிறுபான்மை மக்கள் மீது அரசியல் வெறுப்பு உணர்வு ஏற்படுத்துகிறார். கோவிலை முழுமையாக கட்டாமல் அதில் ராமர் சிலையை நிறுவுவதை சங்கராச்சாரியார்கள் மற்றும் இறை நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்காத போதும் மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் அரசியல் சாசனப்படி அனைத்து மதத்தினையும் சமமாக நடத்துவேன் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டவர் தனி மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகிறார். இது இந்திய அரசியல் சாசனத்திற்றகு எதிரான வன்மப் போக்காகும். திராவிட மாடல் தமிழ்நாடு அரசு விழாவில் பங்கேற்கவில்லை என்று சில பாஜக தவைர்கள் விமர்சிக்கின்றுனர்.
கோவில் விழாவை அரசியல் விழாவாக மாற்றுவதை.
ஏற்றுக்கொள்ள முடியாது . மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு எதற்காக ஒன்றிய அரசு விடுமுறை தரவேண்டும். மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாட்டையே சிதைத்து வருகிறார்கள். இது போன்று இன்னொரு மதத்தின் விழாவிற்கு விடுமுறை தருவார்களா? மத உணர்வை வைத்து அரசியல் செய்வதற்கான நிகழ்ச்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை பதவிக்கான வெறித்தனமான முயற்சியில் பிரதமர் மோடியும் பாஜகவும் ராமரை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள். நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சரியான பதிலடி கிடைத்திடும். இந்தியா கூட்டணியே வெல்லும் என்று தனது அறிக்கை யில் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தெரிவித்தார்.
