கல்லைக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இதன் மாநில தலைவர் ரமேஷ் அவர்கள் தலைமையிலும், குமார் அவர்கள் முன்னிலையிலும்
கல்லைக்குறிச்சியில்
நடைபெற்றது.

மேலும் இதில் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் நா.சு.செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை யாற்றினார்.

இதில் சின்னசேலம், கல்லைக்குறிச்சி தொடர்வண்டி திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்,ரயில் வண்டி நிலையத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி. கல்லைக்குறிச்சி நகரத்திலேயே அமைக்க வேண்டும் என கோரி சனவரி 05 ஆம் தேதி கல்லைக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், பொங்கலுக்கு பிறகு சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இறுதியில் சக்திவேல் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கல்யாணசுந்தரம்.செங்கான். சதீஷ்குமார்.ஆறுமுகம்.கோவிந்தராஜ். காமராஜ். பன்னீர் செல்வம் மகளிரணி நிர்வாகிகளான நாகம்மாள்.ஆதிலட்சுமி .செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.