வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் இதன் அருகிலேயே வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் ஆர் ஐ அலுவலகம் செயல்பட்டு வருகிறது வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளராக திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் கொரட்டி பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்து பணியிட மாற்றமாக வாணியம்பாடியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் சமீப காலமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் வாரிசு சான்றிதழ் மற்றும் முதியோர் உதவி
தொகைக்கு விண்ணப்பம் செய்யும் பொது மக்களிடம் அதிக அளவு லஞ்சப் பணம் வற்புறுத்தி கேட்டு பெறுவதாகவும் கொடுக்க மறுக்கும் மனுதாரர்களை காத்திருக்க வைத்து காலம் கடத்துவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்த வண்ணம் இருந்தது இதுகுறித்து சான்றிதழ் விண்ணப்பித்தவர்களிம் மற்றும் ஒரு சில அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் சில உண்மைகள் தெரிய வருகிறது.
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் சிவா அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் எனும் இடைத்தரகரை உடன் அழைத்து வருவதாகவும் வருவாய் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கணினியில் சரி பார்ப்பது முதல் எந்தெந்த மனுக்களுக்கு பணம் வந்தது என கணக்கெடுத்து அவைகளுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கலாம் என வருவாய் ஆய்வாளர் சிவாவுக்கு பரிந்துரை செய்வதாகவும் பிரவீன் குமார் எவற்றையெல்லாம் தேர்வு செய்கிறாரோ அதை மட்டுமே அடுத்த செயல்பாட்டுக்கு அனுப்புவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மேலும் இரவு நேரங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களிடம் புரோக்கர் பிரவீன் குமாரை வருவாய் ஆய்வாளர் சிவா உடன் அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட மணல் மா ஃபியாக்ககளிடம் பேரம் பேசி பணத்தை வசூல் செய்வதாகவும் மணல் கொள்கையில் ஈடுபடும் ஒரு சிலர் மற்ற அலுவலர்களிடம் கூறுகின்றனராம் மேலும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வாரிசு சான்றிதழ் இணைய வழியில் பதிவு செய்து சான்றிதழுக்காக காத்திருந்த 7 நபர்களிடம்
வருவாய் ஆய்வாளர் சிவா இடைத்தரகர் பிரவீன் குமாரை வைத்து நேரடியாகவும் பிரவீன் குமாரின் போன் பே எண் மூலமாக தலைக்கு ஆயிரம் என ரூபாய் 7000 வசூல் செய்துள்ளார் இதில் (ஒரு பயனாளியின் போன் பே எண்ணிலிருந்து இடைத்தரகர் பிரவீன் குமார் எண்ணுக்கு 500 மற்றும் 500 என ஆயிரம் ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றதை நாம் ஆதாரமாக புகைப்படத்தில் வைத்துள்ளோம்) மேலும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பிரவீன் குமார் எனும் இடைத்தரகரே வருவாய் ஆய்வாளராக செயல்பட்டு அனைத்து ஆவணங்களையும் கையாள்வதுடன் கணினியில் அரசின் ரகசிய குறியீடு எண்களை பதிவு செய்து கணினியையும் கையாள்கிறார் என்பது அதிர்ச்சிகரமான தகவல் மேலும் இது குறித்து ஒரு சில இ சேவை மையங்களில் விசாரணை மேற்கொண்ட போது வாரிசு சான்றிதழுக்கு ரூபாய் 4000 த்தை எங்களிடம் கொடுத்து விட்டு நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சு நாங்களே உங்களை கூப்பிட்டு சான்றிதழை கொடுத்து விடுகிறோம் என கூறுகின்றனர்.
நாம் வாடிக்கையாளர் போல் இ சேவை மையத்தை நடத்தும் நபரிடம் கேட்டதற்கு விஏஓ, ஆர் ஐ, மண்டல மேலிடத்து துணை வட்டாட்சியர் அனைவரையும் நாங்கள் சரி கட்டி விடுகிறோம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணங்களை கழித்தால் நீங்கள் வெறும் 60 ரூபாய் தான் இ சேவை மையத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் இதில் எங்களுக்கு எந்தவித லாபமும் இல்லை என கூறுகின்றனர் மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கஸ்தூரி இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அம்பலூர் பகுதியில் பணியில் இருந்த போது லஞ்சம் பெற்றதாக வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து ஆறு மாத காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார் பின்னர் வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதிக்கு கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக
பணி நியமனம் செய்யப்பட்டார் ஆனால் கஸ்தூரி அப்பகுதிக்கு பணிக்கு சரியாக செல்லவில்லை என தெரிய வருகிறது பின்னர் வாணியம்பாடி நகரத்தில் அம்பூர் பேட்டை கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் வாணியம்பாடி அடுத்த கொல்ல குப்பம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னர் அப்பகுதியின் பொதுமக்கள் இவர் பணிக்கு இப்பகுதிக்கு வருவதே இல்லை என்று புகார் கூறினர் ஆனால் கஸ்தூரி ஆர் ஐ அலுவலகம் மற்றும்
வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே வளம் வந்து கொண்டிருப்பதாக அலுவலக ஊழியர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர் இவர் தொடர்ந்து தன்னை அம்பலூர் பகுதிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என முன்னாள் வட்டாட்சியர் சாந்தியிடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும் உன் மீது லஞ்சம் பெற்ற புகார் வந்த இடத்திற்கு என்னால் பணியிட மாற்றம் செய்ய முடியாது என அவர் கண்டிப்புடன் கூறியதால் அலுவலகத்தில் ஒரு சில அதிகாரிகள் துணையுடன் வட்டாட்சியர் சாந்திக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் படியும் மன உளைச்சலை ஏற்படுத்தும் படி நெருக்கடிகளை மற்ற அலுவலர்கள் மூலமாக கொடுத்ததாகவும் தெரிய வருகிறது இதனால் மன வருத்தத்தில் இருந்த வட்டாட்சியர் சாந்தி மாவட்ட ஆட்சியரிடமும் உயர் அதிகாரிகளிடமும் அலுவலக நிலை குறித்து புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அவர் 15 நாட்கள் விடுமுறை மேற்கொண்டார்.
இந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே இப்பகுதியில் பணியாற்றி
பணியிட மாற்றம் பெற்ற வட்டாட்சியர் மோகன் என்பவரை மறுபடியும் வாணியம்பாடியில் வட்டாட்சியராக பணியினை தொடரும்படி உத்தரவு வந்ததைத் தொடர்ந்து தற்போது வாணியம்பாடி வட்டாட்சியராக மோகன் பொறுப்பு வகித்து வருகிறார் மேலும் வட்டாட்சியர் சாந்தி பணியிட மாற்றத்திற்கு நாங்கள் தான் காரணம் கவருக்கு பேனாவை பிடிக்கும் காரில் பவனி வரும் ஒரு சிலரை வைத்து சாந்தி மீது தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி பணியிட மாற்றம் செய்து விட்டோம் என அலுவலகத்தில் உள்ள ஒரு சிலர் மார்தட்டி கொள்கின்றனராம் (பூனை கண்ணை மூடி கொண்டதால் பூலோகம் இருண்டு விட்டது என்ற பழமொழிக்கேற்ப) ஆனால் வட்டாட்சியர் சாந்தி அவருடைய விருப்பத்தின் பேரிலேயே பணியிட மாற்றம் பெற்றார் என்பது தான் உண்மை.
மேலும் வட்டாட்சியர் மோகன் வாணியம்பாடியில் பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள் கஸ்தூரி என்பவர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான அதே அம்பலூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வருவாய் ஆய்வாளர் மேஜையில் இருக்கும் சான்றிதழ் அடுத்த டேபிளுக்கு செல்லவே இவ்வளவு போராட்டங்கள் அடுத்தது மண்டல மேலிடத்து துணை வட்டாட்சியர் கௌரிசங்கரின் டேபிள் ஆர்.ஐ அலுவலக வேலை முடிந்து இந்த டேபிளில் வந்து நிற்பவர்களின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் பயனாளிகளுக்கு கௌரிசங்கர் சரியான பதில் சொல்வதில்லை என்றும் ஒரு மணி நேரம் நின்று கொண்டு இருந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வது போன்ற செய்கைகளில் ஈடுபடுகிறாராம் வட்டாட்சியர் சாந்தியின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கௌரிசங்கர் என வருவாய்த்துறை சார்ந்த ஒரு சிலர் கூறுகின்றனர் இவர் அலுவலக காரியங்களை ஒரு சிலரிடம் கூறி அந்த நபரை பற்றி செய்தித்தாள்களில் செய்தி வர வைப்பது இவருடைய தனி ஸ்டைலாக வைத்துள்ளார் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முதலில் செய்தி போடுவது பின்னர் பேரம் பேசி தங்கள் வயிற்றை வளர்க்கும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆகவே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் லஞ்ச லாவணியத்தில் உழன்று கொண்டிருக்கும்
அதிகாரிகள் மீதும் தொடர்ந்து ஒரு அலுவலர் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் ஒரு சில பேனாக்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
