எழும்பூர்:
சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் முதுநிலை சமூகப்பணித் துறையின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் மாணவர் மன்றமான ‘அரோகா’வும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் நடைப்பெற்றது.

இந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் என்கிற பொருள் குறித்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்கிற உயரிய நோக்கத்தில் கருத்தரங்கம் அமைந்தது.

இந்நிகழ்வில் துறைத்தலைவர் பேராசிரியர் பி. ஜெசுயின் ஜான் போஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். இராஜா சாமுவேல் தலைமையுரை ஆற்றினார்.

மேலும் இந் நிகழ்வில்
யூனிசெஃப் நிறுவனத்தின் வளர்ச்சித் தொடர்பு வல்லுநர் சியாம் சுதிர் பண்டி, சென்னை ஐ.ஐ.டி, டி.டி.கே – ஆர்.டி2 தலைவர் டாக்டர் சுஜாதா ஸ்ரீநிவாசன், வித்யாசாகர் நிறுவனர் பூனம் நடராஜன், என்.ஐ.இ.பி.எம்.டி.யின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் டேமியன் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கெமிலியஸ் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு குறித்தும் அவர்களின் நிலையான வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்தும் சிறப் புரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், கல்வியாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் மாணவர்கள் அதிகமாக கலந்து கொள்வது என்பது எல்லோருடைய நலனையும் உள்ளடக்கிய சமூக உருவாக்கத்திற்கு வித்திடும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் இந்த நிகழ்வு மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட காரணமாக அமையும்.