திருவள்ளுர்: பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சி திட்ட முகாம் நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

இந்த முகாமினை
லிங்க்ட்இன் (LinkedIn) மற்றும் பெஸ்ப்பேரப் (Faceprep) வழிகாட்டுதலின்
படி நான் முதல்வன் குழுவினரால் நடத்தப்பட்டது.
ஶ்ரீராம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.பி.கார்த்திகேயன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு பயிற்சியாளர்
தசாரி மணிராம் அவர்கள் மாணவர்களுக்கு வேலை வழிகாட்டுதல் திட்டங்களை விளக்கி கூறினார்.

ஶ்ரீ ராம் பொறியியல் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை சார்பில் ஒருங்கிணைப்பாளர்களான பி. தீபக் மற்றும் ஏ. ராஜிவ் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்வின்போது கல்லூரி முதல்வர் பேசியதாவது, இன்றைய மாணவர்கள் பொறியியலில் தற்போது வெளிவரக்கூடிய தொழில்நுட்பங்களை பற்றி ஆர்வம் காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் மாணவர்கள் தாங்கள் படித்த துறையில் தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என கூறினார்.
மேலும் சிறப்பு பயிற்சியாளர் பேசியதாவது, இன்றைய மாணவர்கள் பொறியியலில் தனது திறனை வளர்த்துக் கொள்ள லிங்க்ட்இன் வேலை வாய்ப்பு செயலி உதவும் என்றார். இச்செயலியில் ஏராளமான இலவச கோர்ஸ் உள்ளது என்றும், மாணவர்கள் அதனை பயன்படுத்தி தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக போகிறது எனவும் பேசினார்.
இந்நிகழ்வின் இறுதியாக பேராசிரியர் ராஜிவ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
