வாணியம்பாடி வட்டாச்சியர் சாந்தியின் நற்பெறுக்கு கலங்கம் ஏற்படுத்த சதியாலோசனையா ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவர் வாலாஜா வட்டத்தில் வருவாய் ஆய்வாளராகவும். அணைக்கட்டு வட்டத்தில் மண்டல துணை தாசில்தாராகவும், திருப்பத்தூர் கலால் தாசில்தாராகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் வருவாய் துறையில் பல்வேறு பிரிவின் கீழ் பணியாற்றியுள்ளார். இவர் திருப்பத்தூர் கலால் வட்டாட்சியர் ஆக பணியிலிருந்து வாணியம்பாடி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு இருந்த வட்டாட்சியர் சம்பத் மீது எழுந்த புகாரின் காரணமாக அவர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டு தற்போது திருப்பத்தூர் அறநிலையத்துறையில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார் ஏற்கனவே சம்பத் மீது முறைகேடாக பணம் கேட்ட ஆடியோ வெளியானதால் தற்போதுள்ள வட்டாட்சியர் சாந்தி எந்தவித தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தன்னுடைய பணியை செய்து வருவதாக தெரிகிறது.
ஆனால் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மண்டல மேலிடத்து பொறுப்பில் உள்ள ஒரு சிலர் அலுவலகத்தில் கூட்டணி அமைத்து இவர் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர் .
காரணம் பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தடையில்லா சான்று வழங்க, ஒருங்கிணைந்த சான்றிதழ், விதவை மகள் சான்றிதழ், திருமணம் ஆகாதவர் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க போன்ற சான்றிதழ்கள் ஒவ்வொறு சான்றிதழும் சரியானதுதானா அனைத்து ஆவணங்களும் உண்மை தன்மையுடன் உள்ளனவா என சரி பார்த்த பின்னரே தகுதி உடைய சான்றிதழ்களை மட்டும் வழங்குவதாக தெரிகிறது இதனால் மற்ற அலுவலர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் சான்றிதழை கொடுக்கும்படி வற்புறுத்துவதாக தெரிகிறது ஆனால் சட்டத்திற்கு புறம்பாக இது போன்ற செயல்களில் ஈடுபட மறுக்கும் இவர் கராராக இருப்பதால் இவர் மீது பொய்யான புகார்களை சமூக வலைதளங்களிலும் செய்தி சேகரிப்பவர்களிடமும் கூறி வருவதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மேலும் வட்டாட்சியர் சாந்தியை உருவ கேலி செய்து அவர் மீது காழ்புணர்ச்சியில் உள்ளவர்கள் பேசி வருகின்றனர்.
மேலும் மண்டலத்து மேலிடத்து துணை பொறுப்பில் உள்ள அலுவலரின் வாய் வழி உத்தரவின் பேரில் அலுவலக அலுவலர்கள் முதல் கிராம நிர்வாக உதவியாளர் வரை வட்டாட்சியர் சாந்திக்கு மரியாதை கொடுக்க கூடாது என கூட்டாக முடிவு செய்துள்ளனராம்
இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட வாணியம்பாடி வட்டாட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சார் நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் படிப்படியாக முன்னேறி இன்று வட்டாட்சியராக பொறுப்பில் உள்ளேன் என் மீது அவதூறு பரப்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை நான் எனது பணியை நேசிக்கிறேன் உண்மையான பயனாளிகளுக்கு செய்ய வேண்டிய என் கடமைகளை என் மனசாட்சிக்கு விரோதம் இன்றி செய்து வருகிறேன்.
என் மீது அவதூறுகளை பரப்பி வரும் நபர்களை நான் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை ஆதாரமற்ற இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வரும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட உள்ளேன் ஏனெனில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட முடியாமல் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்று நம்மிடம் கூறினார்.
மேலும் மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியர் சாந்தி மீது அவதூறுகளை பரப்பி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்
(சிறப்பு நிருபர் விஜயசஞ்சை)
