அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம் சார்பில்
நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆம் ஆண்டுகள் திரைபயணத்தை பெருமை படுத்தும் விதமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
மீஞ்சூர்:அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம் சார்பில்
நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆம் ஆண்டுகள் திரைபயணத்தை பெருமை படுத்தும் விதமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் அருகிலுள்ள லவ் பவுண்டேஷன் ஆதரவற்றோர் காப்பகத்தில் இந்த இயக்கத்தின்
மாநில மகளிர் அணி தலைவி தெய்வானை தசரதன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்த நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் ஷியாம்சுந்தர் மற்றும் மாநில செயலாளர்
லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில்
150 பேர்களுக்கு அறுசுவை மதிய உணவும்,
31 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்,
31 முதியோர்களுக்கு வேஷ்டி,
31 பெண்களுக்கு புடவை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.

மேலும் நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆண்டு கால திரைபயணத்தை சிறப்பிக்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட துனை தலைவர் கே.டி.எல் ஜெய்கணேஷ்,அரியலூர் மாவட்ட தலைவர் ஜான்கார்த்தி,தருமபுரி மாவட்ட தலைவர் பிரபாகரன்,
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகி அஜீத்,சைதை பகுதி தலைவர் சைதை கணேஷ்,தருமபுரி மாவட்ட நிர்வாகி கலீம்பாஷா,
உள்ளிட்ட அனைத்து மாநில மாவட்ட தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் நாகர்கோவில் தலைமை நற்பணி மன்ற மாநில பொருளாளர் (விக்னேஷ்வரா ரியல் எஸ்டேட்) நீலகண்டன் அவர்கள் நன்றியுரை நல்கினார்.


