மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்!
கள்ளக்குறிச்சி:
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
கல்லைக்குறிச்சி ஏ. கே. டி. தங்கும் விடுதியில் அமைப்பு செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஏ. டி. சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில பிரச்சார செயலர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.
இம்மையத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் மனித நேயர் முனைவர். நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக் சிறப்புரையாற்றினார்.
மேலும் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்தவும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரியும்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்மத்திய அரசு நவோதயா பள்ளிகளை உருவாக்கி ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளித்திடவும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும்,
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த கோரியும்,
தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களை யும் உடனடியாக தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்பிடகோரியும்,
தமிழ்நாட்டு அரசின் மருத்துவ மனைகள். மருத்துவ கல்லூரிகளில். ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணி நியமனம் செய்வதை உடனடியாக கைவிட்டு. தகுதியான மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும். அதன்மூலம் ஏற்படும் காலி பணியிடங்களில். தகுதிவாய்ந்த மருத்துவர்களை கொண்டு பணி நியமனம் செய்திட கோரியும்,
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து பணிய இடங்களிலும். தகுதியான தமிழக இளைஞர் களை கொண்டே நிரப்பிட கோரியும்,
கல்லைக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரியும்,கல்லைக்குறிச்சி-சின்னசேலம் தொடர்வண்டி திட்டத்தை உடனடியாக முடித்து. புகைவண்டி நிலையத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி தியாகதுருகம் சாலையிலேயே அமைத்திட கோரியும்,
தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறியது போல அனைத்து அரசு நிறுவனங்களிலும் தற்காலிக ஒப்பந்த அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு நிரந்தர பணியாளர் பணி நியமனம் செய்திட கோரியும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட தீர்மானங்களை செயல்படுத்திட.
மத்திய. மாநில அரசுகளை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம் கல்லைக்குறிச்சியில் வருகிற 02.8.2023. புதன்கிழமை காலை பத்து மணிக்கு நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இறுதியில் மாநில துணை பொதுச்செயலாளர் எஸ். கல்யாண சுந்தரம் அவர்கள் நன்றியுரை நல்கினார்.
