வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அலுவலக ஊழியர் மூலம் லஞ்ச வசூல் வேட்டை: கலெக்ஷனில் கல்லா கட்டும் சப் ரிஜிஸ்டர் யாகியாக்கன்
வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது பத்திரப்பதிவு அலுவலகம்
இந்த அலுவலகத்தில் தற்போது பத்திரப்பதிவு அலுவலராக( சப்ரிஜிஸ்டர்)
பணியாற்றி வருபவர் யாகியாக்கன் இவர் அலுவலகப் பொறுப்பேற்று சுமார் ஐந்து மாதங்கள் ஆகிறது.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சப்பனம் பெறுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது பத்திரப்பதிவிற்கு வரும் பொது மக்களிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன மேலும் கேட்ட லஞ்ச பணத்தை தர மறுக்கும் பொது மக்களுடைய ஆவணங்கள் நான்கு ஐந்து மாதங்கள் ஆனாலும் கிடப்பில் போடப்பட்டு அவர்களிடம் சேர வேண்டிய ஆவணம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது மேலும் பத்திரப்பதிவு முடிந்தவுடன் களப்பணி பார்க்க செல்லும் இடங்களில் பெரும் தொகை லஞ்சமாக பெறுவதாக அலுவலக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாணியம்பாடி பத்திர பதிவு அலுவலகத்தில் ஆலங்காயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் மணி என்பவரை நியமித்து ஒரு நாளைக்கு எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறதோ அதற்கான லஞ்ச பணத்தை மணியிடம் கொடுத்து விட வேண்டும் என வாய் வழி உத்தரவாம்.
இவற்றை வசூல் செய்து அலுவலகம் முடிந்தவுடன் கணக்கு பார்க்கப்பட்டு சார் பதிவாளர் யாகியாகான் பங்கை கொடுத்து விடுகிறார்களாம் மேலும் அலுவலக நேரத்தில் வசூல் செய்யப்படும் லஞ்ச பணத்தை கையில் வைத்துக் கொள்ளாமல் அலுவலகத்தில் உள்ள பரண்களில் பழைய ஆவண கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கு நடுவே வைத்து விடுவதாக தகவல் தெரிய வருகிறது ஆகவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை செய்ய வேண்டும் அவ்வாறு சோதனை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது மேலும் இவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
(வாணியம்பாடி-சிறப்பு நிருபர்)
