சென்னை
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் பரத் ராக்ஸ் 2023 தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு!

தி.நகர்:சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் பரத் ராக்ஸ் 2023 தினத்தை முன்னிட்டு
கல்வியில் சிறந்து விளங்கி வரும் ஏழை,எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா இந்த அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும், செயலாளர் மற்றும் நிர்வாக அலுவலர் சுதா சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையிலும் தியாகராய நகரிலுள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் வணிக வரித்துறை துணை ஆணையர் வி. நந்தகுமார் ஜ.ஆர்.எஸ் மற்றும் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறை,காவல் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.



மேலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தினர்.


மேலும் இந் நிகழ்வில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுரேந்திரன், துணைத் தலைவர் எஸ். துரைராஜ் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகளான ரவிக்குமார், செந்தில் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


பாலகிருஷ்ணன் அறக்கட்டளை தொண்டு நிறூவனம் சென்னையில் பெரம்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் இடத்தில் கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வறுமை ஒழிப்பு, ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உயர்த்தும் நோக்கத்துடன் கடந்த பதினைந்து வருடங்களாக செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் மும்பை, ஒடிசா, ஹைதராபாத் போன்ற இந்தியாவின் பெரிய நகரங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மூலம் 80 லட்சம் வரை நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த அறக்கட்டளையின் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் இருந்து வருகிறார். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் செய்துள்ளார்கள். குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




