தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும்,விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் நிறுவனருமான பொன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரும், தொழிலாளர்களும் என்னும் நிகழ்வு தி.நகர் சர்பிட்டி அரங்கத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்,வணிகர் சங்க நிர்வாகிகள்,நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாவட்ட தலைவர்
முனைவர் பி.ஜெ.செங்கை சத்யா அவர்கள் அவர்கள் கலந்துக்கொண்டு ஆளுயர பண மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அப்போது மாவட்ட பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி,மாவட்ட துணை தலைவர் இரவி,கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன்,கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட துணை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
